காளிஅம்மன் ஆலய மணிமண்டப புனரமைப்பு பணிகள் தீவிரம்

சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய மணிமண்டப புனரமைப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மணிமண்டபத்தை அமைப்பதற்கான உதவிகளை வழங்க விரும்புவோர் ஆலய நிருவாகத்தினரை தொடர்புகொண்டு உதவிகளை வழங்கமுடியும்.

மணிமண்டப வேலைகள் ஆரம்பம்

சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மணிமண்டபம் அமைப்பதற்கான வேலைகள் கடந்த 06.12.2013 அன்று ஆரம்பமாகியது. 

நாகதம்பிரான் ஆலயத்திற்கான அடிக்கல்நாட்டுவிழா

சித்தாண்டி -மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள பரிவாரதெய்வங்களுள் ஒன்றான நாகதம்பிரான் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா ஆலயத் தலைவர் ஆ.தேவராஜா அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலய நித்தியகுரு சத்தியநாதன் ஐயா, விஸ்வகுல விழாக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

திருக்கும்பம் சொரிதல் நிகழ்வு

திருக்கேதார கெளரிவிரதத்தின் இறுதிநாளான இன்று (04.11.2013) திருக்கேதார கெளரி விரத திருக்கும்பம் சொரிதல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய திருக்கும்பம் சொரிதல் நிகழ்வானது ஆலயத்திலிருந்து சுந்தரர் வீதி, மணிவாசகர் வீதி, பிரதான வீதி, உதயன்மூலை வீதி ஆகியவற்றுக்கூடாக  திருக்கும்பம் எடுத்து வரப்பட்டு உதயன்மூலை தீர்த்தக்குளத்தில் சொரியப்பட்டது.

பத்திரகாளி அம்மன் ஆலயயத்தின் திருக்காப்பு வழங்கும் நிகழ்வு

திருக்கோதார கெளரிவிரத நிறைவு நிகழ்வுகளை முன்னிட்டு திருக்காப்பு வழங்கும் நிகழ்வு இன்று (03.11.2013) சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் காலை 9.00 மணி முதல் இடம்பெறற்றுக் கொண்டிருக்கின்றது. 

பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குடப் பவனி - 2013

சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் கேதார கெளரி விரத நிகழ்வுகளை முன்னிட்டு இன்று (29.10.2013) பாற்குடப் பவனி நகிழ்வு சிறப்பாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வானது சித்தாண்டி சித்திரவேலாயுதர் பெருமான் ஆலயத்தில் காலை 8.00 மணியளவில் ஆரம்பித்து, பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து காளிகோவில் வீதியூடாக ஆலயத்தை அடைந்தது. 

கேதார கெளரி விரதம் - 2013

சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திர காளி அம்மன் ஆலயத்தில் கடந்த 14.10.2013 திருக்கும்பம் வைத்தல் நிகழ்வுடன் கேதார கெளரிவிரத நிகழ்வுகள் எதிர்வரும்  04.11.2013  அன்று திருக்கும்பம் சொரிதல் நிகழ்வுடன் நிறைவுபெறவுள்ளது.

ஆலய வரலாறு