Home » » ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

(Sanjee)சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று 18.10.2014 இடம் பெற்ற 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வானது.

ஆலய கௌரவ தலைவர் ஆ.தேவராசா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திரு.உருத்திரன் உதயசிறிதர்(பிரதேச செயலாளர்,பிரதேச செயலகம் ஏறாவுர்பற்று செங்கலடி)கௌரவ அதிதியாக திரு.பொன்னம்பலம் சிவகுரு (கோட்ட கல்வி அதிகாரி ஏறாவுர்பற்று-02 )சிறப்பு அதிதிகள் திரு.ராஜேந்திரன்- கங்காதரன் (உதவி திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலகம் ஏறாவுர்பற்று செங்கலடி), திரு.மூத்ததம்பி சிவானந்தராஜா
(கலாசார உத்தியோகஸ்த்தர் ஏறாவுர்பற்று செங்கலடி),திரு.பஞ்சாட்சரம் ராஜ்மோகன் (சமூகசேவை உத்தியோகஸ்த்தர் ஏறாவுர்பற்று செங்கலடி) மற்றும் பாடசாலை அதிபர்கள் ,பெற்றோர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள்,ஆலய நிருவாக சபை உறுப்பினர்கள்,கிராம சேவையாளரும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வின் போது ஆலய இணையத்தள அங்குரார்ப்பனமும் ,நிதி அறப்பணி மன்றமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மற்றும் ஆலய அறங்காவல் சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களும் பிரதேச செயலாளர் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.அத்தோடு ஆலயத்தின் மூத்த உறுப்பினர் சிவசம்பு ஜயா அவர்கள் பிரதேச செயலாளர் அவர்களால் பென்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.இன் நிகழ்வின் ஞாபகார்த்தமாக பிரதேச செயலாளர் அவர்களால்வெள்ளை எரிக்கை மரமும் நட்டு வைக்கப்பட்டது.





























































0 comments:

Post a Comment